நாள் தோறும் தண்ணீர் விட்டு "நான் வளர்க்கிறேன்!" என்றுகொண்டிருந்தேன்.
மொட்டை மாடியில் தொட்டியில் வளர்ந்திட்ட பசலைக் கீரை சொன்னது
"நீ ஒன்றும் என்னை வளர்க்கவில்லை!
இயற்கை அன்னை தான் என்னை வளர்க்கிறாள்.
அவள் என்னை வளர்த்து வந்த இந்த மண்ணை மூடிவிட்டு,
கட்டிடம் கட்டி என்னை வளரவிடாமல் செய்துவிட்டது நீ.
உன் சொந்தத் தேவைக்காக எனக்குத் தண்ணீர் விடுவதும், எரு போடுவதும்
நீ செய்த வன்முறைக்கான பிராயச்சித்தம் மட்டுமே."
உண்மை விளங்கிற்று.
அகங்காரம் அடங்கிற்று.
பணிவும், நன்றியுணர்வும் மலர்ந்தன.

No comments:
Post a Comment