இயற்கை முறைக் கல்வி

Tuesday, August 20, 2013

மாற்றுக் கல்வி உரை - சில விளக்கங்களும் திருத்தங்களும்

எனது உரையிலுள்ள சில பாகங்களுக்கான விளக்கங்களும், திருத்தங்களும். (இவை எனது உரையைப் படித்த நண்பர் ஒருவரிடம் உரையாடும் போது தெளிவாயின.)

பன்முக நுண்ணறிவு 
நான் நுண்ணறிவைப் பல வகைப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு திருத்தம். மனிதனுக்கு இருக்கும் நுண்ணறிவு என்பது அடிப்படையில் ஒன்று தான். ஆனால் அது பல முகங்களைக் கொண்டது. பல பரிமாணங்களைக் கொண்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுகின்றது.  அவ்வளவுதான்.

கற்றல்  
குழந்தைகளின் கற்றல் கேள்விகளில் தொடங்குவதாகப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். ஒரு விளக்கம். கேள்விகள் எப்போதும் வார்த்தைகளாகவே உணரப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சமயங்களில் கேள்விகள், ஒரு சொல் வடிவமற்ற வகையில்தான் எழும்பும். அதற்குப் பெயர்தான் curiosity. "நம்மைச சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது? நமக்கு இதில் உள்ள இடம் என்ன?" என்பதைப் பற்றிய தேடல் சதா குழந்தைகளுக்குள், சொல் வடிவம் பெறாத வகையில், இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் அதைக் கற்றலாகத் தனித்து உணர மாட்டார்கள்; பார்ப்பவர்களுக்கும் அதைத் தனியாகப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது.

பள்ளிக்கூடம் தேவைதானா?
எனது உரையில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்கிற ஒன்று தேவை, ஆனால் அது வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரியலாம். இதை சற்று விளக்க வேண்டியுள்ளது. 

ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் வாழும் குழ்ந்தை, அங்கிருந்தே பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. ஒரு / பல சிறப்புத் துறையில் தேர்ச்சிபெற வேண்டும் என்னும் சமயத்தில், அதற்கான தக்க அறிஞர் / வல்லுநர்களிடமிருந்து கற்க ஏற்பாடு செய்தாலே போதும். இதற்கு apprenticeship / internship என்ற பெயர் உண்டு. ஆனால், இன்றைய சூழலில், வன்முறை தலைவிரித்தாடும் குடும்பங்கள் பலவற்றிலிருந்து குழந்தைகளை விடுதலை செய்ய, நாம் நடத்தும் பள்ளிக்கூடங்க்களை மாற்றி அமைத்தால், நமது சமுதாயத்துக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைக்கும். தேங்கிக் கிடக்கும் உயிர்ச்சக்தியை ஓட வைத்தால், அடுத்த தலைமுறை நமது வன்முறையான சமுதாயப் போக்கை மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறேன்.

பண்டைய  இந்தியாவில் ஓங்கி இருந்த ஞானத்தையும் அறிவு வளர்ச்சியையும், நான் கண்டறிய கண்டறிய எனது பிரம்மிப்பு கூடிக்கொண்டே போகிறது. இவ்வளவு சிறப்பான, விரிந்த, பன்முகம் கொண்ட அறிவு வளர எத்தனை சிறப்பான கல்வி முறை புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்னும் கேள்வி எழும்புகிறது. அதைப் பற்றிய ஆராய்ச்சியில் / தேடலில் அடுத்த சில மாதங்கள் செலவழிக்க இருக்கிறேன்.   குருகுலங்கள் எவ்வாறு செயல்பட்டன? கல்வியில், குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் குருக்களின் பங்கு என்னவாக இருந்தது? இன்றைய கல்வி முறையை மாற்றி அமைப்பதற்கு நமது மூதாதையர்களிடமிருந்து  கற்றுக் கொண்டு செயல்படுத்துவதற்கு என்ன இருக்கிறது? என்பன போன்ற பல கேள்விகளை சுமந்து கொண்டு இந்தத் தேடலில் அடியெடுத்து வைக்கிறேன்.

வெவ்வேறு வகையான அறிவைப் பெறுவதற்கு வெவ்வேறு  அறைகளா?  
நான் கூறியிருப்பது போல, கற்றல் என்பது ஒரு முழுமையான அனுபவம். சாதாரண பள்ளிகளில் ஒவ்வொரு நாளையும் 40 நிமிடங்களாகக் கூறு போட்டு, ஒவ்வொன்றிலும் ஒரு subjectஐப் பற்றிய தகவல்களையும் கருத்துக்களையும் திணிப்பது என்பது நடக்கிறது. நெல் பயிரைக் கொண்டு முழுமையான கற்றலின் நிகழ்வை விளக்கியிருக்கிறேன். தனித் தனி அறைகள் என பட்டியலிட்டிருப்பது, கல்வியை "நேரத்தை' கொண்டு அல்லாமல் வேறு விதத்தில் கூறு போடுவதற்காக அல்லவே அல்ல. தோட்டத்தில் இருக்கும் போது இசையை உருவாக்கலாம். (நம் நாட்டுப்புறப் பாடல்கள் பலவும் அப்படிப் பிறந்தவை தானே!) தோட்டத்திலுள்ள களிமண்ணைக் கொண்டு அங்கேயே பொம்மைகள் வடிவமைக்கலாம். ஒவ்வொரு பயிற்சிக்கும் சில குறிப்பிட்ட வகையான சூழலும், அதற்குத் தேவையான கருவிகளும் தேவையாக இருக்கும் என்பதால் மட்டுமே அந்த அறைகளின், இடங்களின் பட்டியலை உருவாக்கினேன். கல்வியை / அறிவைக் கூறு போடுவதற்காக அல்ல. 

சான்றிதழ்கள் 
இவற்றைப் பற்றிக் குறிப்பிடும் போது, இவைகளை வழங்க மாநில அளவில் ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். அதில் ஒரு திருத்தம். பரவலாக்கிய நிர்வாக முறையில் அமைய வேண்டும் என்கிற எனது புதிய-உலகப் பார்வையில் இதற்கு இடம் இல்லை. உள்ளூர் அளவிலேயே சான்றளித்தலுக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும். 

***

கல்வியைப் பற்றிய எனது தேடலும் கல்வியும்  தொடரும். அதற்குத் தகுந்தாற்போல, எனது புரிதலும் எழுத்தும் விரியும் என்று நம்புகிறேன். கேள்விகளையும், பின்னூட்டத்தையும், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். நன்றி. 

7 comments:

aandon ganesh said...

would u know about isha home school method? the way i got from your point of view is be real in that school.kindly reply

Sangeetha Sriram said...

Yes Ganesh. I have visited Isha Home School many years ago, when they had just started. Recently, I visited their website. But I'd like to visit sometime. My concern around schools such as this is that they are very expensive. This means that it will be possible only if the parents are plugged into the exploitative capitalistic system through high-paying jobs! I am unable to reconcile that.

சரவணன் said...

அந்தக்கால குருகுலத்தில் ஆசிரியருடன் மாணவர் முரண்பட, விவாதிக்க இடம் இருந்ததாக நம்ப முடியவில்லையே? ஆசிரியர் சொன்னதைக் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற முறைதான் இருந்திருக்கும் என்பதே என் மனதில் உள்ள சித்திரம். (வெறும் அனுமானம் மட்டுமே; இது பற்றி எதுவ்ம் படித்ததில்லை.)

Panneerselvam said...

Madam Its really great to know that you are entering to research our old way of Gurukul Teaching. Welcome-Panneer Selvam

Lakshmanan said...

Sangeetha, the only reason many of us are still 'plugged into the exploitative capitalistic system through high-paying jobs' is to let enable our children get better education than the state run board that turned us into machines in the first place!

Sangeetha Sriram said...

I understand Lakshmanan. Then, how do we break the cycle? Today's elite alternative schools are also churning out children who are so awfully disconnected from poverty and the lives of the poor around them. Isn't that also something that the exploitative system wants? To separate the rich and the poor emotionally, so that it can keep growing without the self-absorbed rich feeling any sense of moral responsibility? So, it can keep at it without interference? What these two videos by Sainath and let me know what you think.

Globalising Inequality
http://www.youtube.com/watch?v=U42zOfxzICs

Nero's Guests
http://www.youtube.com/watch?v=4q6m5NgrCJs

Sangeetha Sriram said...

சரவணன், நானுன் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. அதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு பிறகு இதைப் பற்றி விரிவாகக் எழுதுகிறேன்.