Sunday, February 7, 2016

பசுமைப் புரட்சியின் கதை







புத்தகத்தை கீழ்கண்ட இணையதளங்களின் மூலம் வாங்கலாம். 


New Media Horizon

Amazon

Book Connect

Discovery Book Palace


வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


அவ்வப்பொழுது எனக்கு விவசாயி வாசகர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. "அம்மா, இந்த நூலை எழுதினதுக்கு ரொம்ப நன்றி. எல்லா விவசாயிகளும் படிக்க வேண்டிய முக்கியமான நூல்." என்று அவர்கள் கூறக் கேட்கும்போது இதயம் நிறையும்! சில வாசகர்களிடமிருந்து விவசாய கூடுகைகளில் இந்த புத்தகத்தை பகிர்ந்தளிப்பதற்கென மொத்தமாக வாங்குவதற்கும் வேண்டுகோள்கள் வரும். ஆனால், புத்தகத்தின் விலையின் (ரூ. 200) காரணமாக அனைவராலும் எளிதில் வாங்க முடிவதில்லை. உங்களில் யாரேனும் இந்த புத்தகத்தை விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுக்க விரும்பினால், மின்னஞ்சல் மூலமாக எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் அன்பளிப்பு யாரைச் சென்றடைந்தது என்ற விவரத்தையும் முடிந்தவரையில் பகிர்ந்துகொள்வேன். நன்றி!

4 comments:

selva ganapathy said...
வேளாண்மை குறித்து மிக துல்லியமான கருத்துகளை நம் முன் வைக்கும் இந்த புத்தகம் நம்மிடையே வேளாண்மையில் இன்றைய நடைமுறையில் உள்ள பயிற்சி முறைகளை குறித்து தெளிவான கருத்துகளை பகிர்கிறது. அதுமட்டுமலாது பசுமை புரட்சியின் உண்மையான விளைவுகள் குறித்து பகுப்பாய்வு செய்கிறது... வேளாண்மை குறித்து தெரிந்து கொள்ள இது போல ஒரு எளிய புத்தகம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கின்றது
ரா.கிரிதரன் said...
அன்புள்ள சங்கீதா



பசுமைப் புரட்சியின் கதை புத்தகத்தை மிகுந்த பரவசத்தோடு படித்துமுடித்தேன். முடித்த கையோடு உங்களுக்கு மடல் அனுப்பியிருந்தேன். அதில் ரொம்பவும் சொல்ல முடியவில்லை. புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இந்தியாவில் சில இடங்களுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். சென்ற இடத்திலெல்லாம் உங்கள் புத்தகத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். தரம்பாலின் புத்தகத்திலும், நம்மாழ்வார் (பசுமை விகடன்) எழுதிய கட்டுரைகளிலும் நமது பசுமைப் புரட்சியின் பக்கவிளைவுகளைப் பற்றி படித்திருந்தாலும், நமது இந்திய மண்ணுக்கும் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைப் பற்றி இத்தனை நெருக்கமாக எழுதப்பட்ட புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. குறிப்பாக களர் பிடுங்குவதும், தழை பரத்தலும், புழுக்கள் சதா உழுவதுமாக அமைந்த ஈர மண் போன்றவற்றைக் குறிப்பிட்டு சதா இயங்கிக்கொண்டே இருக்கும் நுண்ணிய நிலவளங்களின் மகத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியர்கள் எப்போதும் இயற்கையோடு இயைந்த வாழ்வை பேணியவர்கள் என பள்ளிக்கூடப்பாடங்களில் படித்தபோது வராத உணர்வுப்பெருக்கு உங்கள் நூல் மூலம் கிடைத்தது. இயற்கையை ஒவ்வொரு நொடியும் அறிந்துகொள்ளும் தனிமனித அனுபவங்கள் நம் விவசாய மக்களிடம் எத்தனை எத்தனை! மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் தழைகளை களைந்து செயற்கையான யூரியாக்கள் மூலம் பணப்பயிர்களின் விளைச்சலைப் பெருக்கி இயற்கையை ஒரு போகப்பொருளாக/வால்-மார்ட் சாமானாக மாற்றிய பசுமைப் புரட்சியின் கதை தனிப்பட்ட முறையில் எனக்குப் பல திறப்புகளைத் தந்தது. மசநாபுவின் கதை மட்டுமல்லாது, பல இயற்கை விஞ்ஞானிகளின் குறிப்புகளும் நமக்கும் இயற்கைக்கும் உள்ள உறவின் நெருக்கத்தைக் காட்டின. புதுவைக்கு அருகே ஒழிஞ்சாம்பட்டில் தாத்தாவுக்கு இருந்த நிலம் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்ததாகச் சொல்லுவார் - தொடர்ந்து யூரியா மூட்டை தான் விளைச்சலை விட அதிகமாகுதுன்னு விற்றுவிட்டதாக இந்த முறை உங்கள் புத்தகத்தைப் பற்றி என் பெரியப்பாவுடன் பேசியபோது சொன்னார். நமது ஒவ்வொருவரின் குடும்பக் கதையும் உங்கள் புத்தகத்தில் சொலப்பட்டது போலிருந்தது - குறிப்பாக பஞ்ச காலத்தில் நடந்த ஏற்றுமதி விவரங்களை வெறும் எண்களென கடந்துபோக முடியவில்லை. ஒட்டுமொத்த ஞானமாகப் பாராமல் புண்ணுக்குக் கட்டுபோடுவதுபோலத் தீர்வு காண முற்பட்ட பசுமைப் புரட்சியின் பக்கவிளைவுகள் இன்னும் பல கல்லூரிகளும், பள்ளிகளையும் சென்றடையவேண்டும்..உங்கள் restore அமைப்பு மூலம் சிறு குறிப்புகளாகவும், துண்டு பிரசுரங்களாகவும் புத்தகத்தின் சாரத்தை வெளியிட வேண்டுகிறேன். அவை சமச்சீர் கல்வி புத்தகங்களில் பசுமைப் புரட்சி பற்றி இருக்கும் அதீத புகழ்மாலைகளுக்கு எதிர்வினையாக அமையலாம்..பெரும் கோபத்தையும், உணர்வெழுச்சியையும், சமூக அக்கறையையும் ஒரு சேர புகுத்தியது உங்களது நூல். வாழ்த்துகள்.



கிரி
Dr. Kanagaraj Easwaran said...
சகோதரி சங்கீதாவின் பசுமை புரட்சியின் கதை படித்தேன். பசுமைப்புரட்சி நமது வேளாண்மைக்கும் உழவர்களுக்கும் செய்த பாதகங்களை அநியாயங்களை அக்கிரமங்களை விவரிக்கிறது இந்த நூல்.
இந்த நூலின் அடிப்படை கருத்தியலான இயற்கை வேளாண்மையைப் பல்லாண்டுகளாக போற்றிவருகிற அடியேனின் சிந்தனையை பெரிதும் ஈர்த்தது வேளாண் அறிவியல் தொழில் நுட்பம் பிளவுண்டது. நமது பாரம்பரிய அறிவு முழுமையானது என்ற கருத்தாகும். பிளவுண்ட பார்வையிலேயே நானும் சமூகப்பொருளாதார ஆய்வுகளை செய்து வருகிறேனா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
சகோதரி தொடர்ந்து எழுட வேண்டும். உலகமயமாதலுக்கு எதிரான நமது மக்களின் போராட்டத்தின் ஆயுதங்கள் இயற்கை வேளாண்மையும் பாரம்பரிய மருத்துவமும் ஆகும்.
இரண்டாம் பசுமைப்புரட்சியை கொண்டுவருவோம் என்று மத்தியில் ஆள்வோர் கூவுகின்ற சமயத்தில் சரியானபார்வையோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல் வேளான் பெருமக்களுக்கு பெரிய கவசமாகும். வாழ்க வாழ்க
NS Kumar said...
என் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் அனைவரும் படிக்கவும். இதை விவசாய வரலாற்று நூல் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இந்தியாவைபற்றிய, நம் சமூகம், வாழ்க்கைமுறை, வரலாறு, பாரம்பரியம், பொருளாதாரம் என அனைத்தை பற்றியும் வேறு தோற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வரலாற்றை வெள்ளையர் வருகைக்கு முன்-பின் என்று பிரித்து பார்க்கும் அளவு நம் பார்வையை மாற்றிக்காட்டும் திறனுள்ளது. நமது ஊர்-உலகம் முதல் மூளை வரை மேற்குலகின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் சூழலில் இந்த புஸ்தகம் பலருக்கும் பாடமாக இருக்கும். குறிப்பாக, மேற்குலக மேதாவிகள், சயிண்டிபிக் அபிமானிகள், முற்போக்கு-திராவிட சிந்தனையாளர்கள் போன்றோருக்கு. அறியாத பல தகவல்கள், மேற்கோள்கள் என அனைத்தும் அருமை. புதிதாக இதில் என்ன இருக்கப்போகிறது என்று இவ்வளவு நாள் இந்த புக்கை தவிர்த்ததை எண்ணி வருந்துகிறேன்.

உதாரணமாக, உரத்துறையின் தந்தை என்று சொல்லப்படும் லீபிக் என்பவர் தனது ஆராய்ச்சிகளின் குறைபாடுகளை பற்றி பகிரங்கமாக ஒப்புக்கொண்டதை சொல்லலாம். அவரது வரிகள் வெறும் அறிவியல் நோக்கில் மட்டுமல்லாது நம்மை பல கோணங்களிலும் சிந்திக்க செய்யும். லீபிக் தான் NPK அடிப்படையில் செடிகளின் உர தேவை பற்றிய ஆய்வை வெளியிட்டவர். அதிர்ச்சி என்னவென்றால், அவர் 1872 களில் குறைபாடு என்று ஒப்புக்கொண்ட முறையைப் பின்பற்றித்தான் இன்றளவும் யூரியா, டி ஏ பி, பொட்டாஷ், கலப்புரம் போன்றவற்றை பின்பற்றி வருகிறோம். அதற்கு அரசாங்கம் வருடந்தோறும் பல ஆயிரம் கோடி மானியங்களும் உர நிறுவனங்களுக்கு தருகிறது.

திரு.தரம்பால் அவர்களைப் போலவே வெள்ளையர்கள் ஆவணங்களை வைத்தே அவர்களை துகிலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர். நாட்டுப்பசுக்களின் தேவை, முக்கியத்துவம், வரலாறு, சீமை மாடுகள் வந்த கதை, பரவலாக்கப்பட்ட கதை அதனால் ஏற்ப்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் என இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு "வெண்மை புரட்சியின் கதை" என்ற அடுத்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கத் தோன்றுகிறது.

எனது பிலாக்கிலும் பகிர்ந்துள்ளேன்: http://nsasikumar.blogspot.in/2014/08/blog-post.html

3 comments:

Samuel said...

Hello Madam,

Please forgive me, if I am offending anyway by these comments:

1. Based on "scientific" studies von Liebigs' postulates are proven wrong. Good. No doubt. But where is the evidence (please do not tell stories by quoting "Arthashastra" or Thirukural) to prove we people about say 500 years back followed one of the best "agricultural" practices ?

2. If your are damn sure about the "good agricultural" practices we followed, why it is not in our genes. It can not just fly away from our memory, even though "caste" did play a spoilsport.

3. If your are damn sure about the "good agricultural" practices we followed, then why you -kind of people- are always finding fault with "mughuls and Europeans" for loss of great techniques?

4. What is the -THE- single most factor responsible for forgetting the all "good agricultural" practices we followed.

5. At what point or time of our history, we last that track ? And Why ?

6. We have so many "things" following the "great" past like "caste", "songs", foods" dances etc. till date. And how/why/when we lost that agri. practices ?

Samuvel Raj H
Following "curiously" the happenings of India

Sangeetha Sriram said...

Samuel, Am glad to engage with you after you have read my book, where I have attempted to answer your questions with evidence.

Samuel said...

Just ordered it through Amazon. (FYI - the rest of the sites are un-responsive). Thanks for prompt reply.